பாட்டி வைத்தியம் நம் நாட்டில் மட்டும் தான் இருக்கிறதா, உலகம் முழுவதிலும் உள்ளதா என்பதை அறிய நடத்தப்பட்ட ஆய்வில், எல்லா நாடுகளிலும் பாரம்பரிய வீட்டு வைத்தியம் புழக்கத்தில் உள்ளது தெரிகிறது.
* பிரேசில் நாடடில் மூலிகை செடிகள் அதிகளவில் மருந்துக்காக பயன்படுத்தப்படுகின்றன. பருவ காலங்களில் குழந்தைகளுக்கு இருமல், உடல் வலி, காய்ச்சல் ஏற்பட்டால், 'மாசெலா' என்ற மூலிகை செடியின் சாறில் தேநீர் தயாரித்து, முட்டை மஞ்சள் கரு, சர்க்கரை கலவையைச் சேர்த்து கொடுக்கின்றனர். உடனடியாக இருமல் கட்டுக்குள் வந்து விடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
* அஜீரணக் கோளாறுகளுக்கு விட்டமின் சி, நார்ச்சத்து மிகுந்த பழுத்த பப்பாளிப் பழத் துண்டுகளை சாப்பிடக் கொடுக்கும் வழக்கம் மலேஷியாவில் உள்ளது. குடற்புழுக்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, பப்பாளி விதைகளை பக்குவப்படுத்தி சாப்பிட தருவதால், எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் பிரச்னை சரியாவதாகவும் ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.
* பூண்டு பற்களை லேசாக சுட்டு, இடித்து, நாள்பட்ட கறுத்த, தடித்த தோலில் உள்ள தழும்பு மீது தடவினால், மூன்று வாரங்களில் தோல் பழைய நிறத்திற்கு வந்து விடும் என்பது போர்ச்சுக்கல் நாட்டு வைத்தியம்.
* ஆர்னிகா எனப்படும் மலைப் புகையிலையிலிருந்து எடுக்கப்படும் சாறை, மெக்சிகோவில் காயங்களுக்கு தடவுகின்றனர்.
- தி ரீடர்ஸ் டெஜட் ஹெல்த்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!