நமது நோய் எதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிளான புரதங்களை உருவாக்குகிறது, இது தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகள், நச்சுகள், தொற்று கிருமிகளை கண்டறிந்து, அகறறி, நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. ஆனால் சில அரிதான சந்தர்ப்பங்களில், நோய் எதிர்ப்பு அமைப்பு அதன் சொந்த திசுக்கள், செல்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இதற்கு 'ஆட்டோ இம்யூன் டிசாடர்' என்று பெயர்.
எந்த உறுப்பு பாதிக்கப்படுகிறதோ, அதற்கு ஏற்றாற்போல அறிகுறிகள் இருக்கும். ருமட்டாய்டு ஆர்த்ரைடீஸ் வந்தால், மூட்டுகள் பாதிக்கப்படும். ஸ்புரூ என்ற நிலையில் குடல் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படும். தோல் பாதிப்பால் வருவது சோரியாசிஸ். குழந்தைகளுக்கு வரும் ஒவ்வாமையும் ஒரு வகை ஆட்டோ இம்யூன் பிரச்னை தான்.
ஆயுர்வேதமும், ஆட்டோ இம்யூன் நோய்களும்!
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், வயிற்றில் உள்ள 'அக்னி' தான் பிரதானம். எல்லா நோய்களுக்கும் காரணம், 'மந்தாக்னி!' அதாவது, ஜீரண சக்தி குறைவாக இருப்பது. இது, வயிற்றில் இருக்கும் ஜீரண சக்தி மட்டுமில்லை. உடலில் உள்ள திசுக்கள் ஒவ்வொன்றும் அடுத்த திசுவாக மாறும் போது, அதற்கு ஒரு ஜீரண சக்தி இருக்கும். நாம் சாப்பிடும் ஆகாரம் 'ரசம்' எனப்படும்.
இந்த ரசம் ரத்தமாக மாறும் போது ரசாக்னி. அடுத்து மாமிசமாக ஆகும் போது மாமிசாக்னி... இப்படி ஒரு திசு இன்னொரு திசுவாக மாறும் போது, என்சைம்களில் நடக்கும் மாற்றத்தை தாத்துவாக்னி என்று பொதுவாக சொல்லுவோம். ரசாக்னி, ரத்தாக்னி, மாமிசாக்னி, மேதாக்னி, அஸ்தி அக்னி, மஜ்ஜாக்னி, சுக்ராக்னி என்று ஏழு, பிருத்வி, ஆகாசம், அப்பு, வாயு, தேஜஸ் என்ற ஐந்து பஞ்ச மகா பூத அக்னி, வயிற்றில் இருக்கும் ஜாடராக்னி - பசி சேர்த்து இவை 13 வகைப்படும்.
இந்த அக்னிகள் மந்தமாக செயல்பட்டால் நோய் வருகிறது. இந்நிலையில், ஒரு திசு முழுமையாகாமல், உடலில் சுற்றி வரும். இதற்கு 'ஆமம்' என்று பெயர். சோரியாசிஸ் கோளாறில் தோல் திசு முழுமையாக உருவாகாமல் இருக்கும். ருமட்டாய்டு ஆர்த்ரைடீசில், அஸ்தி தாதுவான எலும்புகளில் உள்ள தாது அக்னி சரியாக செயல்படாததால், முழங்கால் மூட்டுகளில் நீர் சேருகிறது. இதுவே குடலில் ஸ்புரூ என்ற நிலையில், வயிற்றில் ஜடராக்னி சரியாக இல்லாததால் வயிற்றுப் போக்கு வருகிறது.
எந்த இடத்தில் உள்ள அக்னி சரியாக இல்லை என்பதை முதலில் கண்டறிந்தால், சிகிச்சை தருவது சுலபம். ஆமம் என்று அஜீரணமாக சுற்றி வரும் திசுவை சரி செய்ய, முதலில் மருந்துகள் தருவோம். ஏழு தாதுக்களின் சாரமாக இருப்பதே, ஓஜஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திக்கான காரணிகளாக எடுத்துக் கொள்ளலாம். உயிர் வாழ தேவையான அம்சமாக இருப்பது ஓஜஸ். தாதுக்களில் அக்னி குறைவாக இருக்கும் போது, ஓஜஸ் உருவாவதும் குறையும். இதை சரி செய்ய மருந்துகள் தரும் போது, நல்ல சாரமான ஓஜஸ் கிடைத்து விடும்.
வயது, நோயின் தன்மை, எந்த நிலையில் சிகிச்சைக்கு வருகின்றனர், தாதுக்களின் தன்மையின் அடிப்படையில், ஆட்டோ இம்யூன் டிசீஸ், 100 சதவீதம் குணப்படுத்தக் கூடியது. பிறவியிலேயே குறைபாடு இருந்தால், நீண்ட நாட்கள் சிகிச்சை தேவைப்படலாம். பஞ்ச கர்மா சிகிச்சையை ஆண்டுதோறும் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, தேவைக்கு ஏற்ப செய்தால், ரூமட்டாய்டு ஆர்த்ரைடீஸ், சோரியாசிஸ் போன்ற கோளாறுகள் குணமாக 100 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. இந்த சிகிச்சையை செய்த பின், 15 ஆண்டுகளுக்கு மூட்டு வலி வராமல் இருப்பவர்களை பார்க்கிறோம். மூன்று - ஐந்து ஆண்டுகள் சோரியாஸ் பிரச்னை திரும்ப வராமல் இருப்பவர்களும் உள்ளனர்.
பரிசோதனை
தசவித பரீக் ஷா, அஷ்டவித பரீக் ஷா, நாடி பரிசோதனை, சிறுநீரின் நிறம், நோய் அறிகுறிகளை வைத்து கோளாறின் தன்மையை கண்டறியலாம். நவீன மருத்துவப் பரிசோதனையில் உள்ள ரத்த, எக்ஸ் - ரே, ஸ்கேன் உட்பட அனைத்தையும் கையாளும் பயிற்சி சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு உண்டு என்பதால், தேவைப்பட்டால் அவற்றையும் உபயோகித்து கோளாறை உறுதி செய்து கொள்வோம்.
டாக்டர் சுதீர் ஐயப்பன், டாக்டர் மீரா சுதீர்,
ஸ்ரீஹரீயம் ஆயுர்வேதம், சென்னை.
99623 50351, 86101 77899
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!