Load Image
Advertisement

'எலக்ட்ரா கிளைட் ஹைவே கிங்' கெத்தான 'ஹார்லி' பைக்

'ஹார்லி டேவிட்சன்' நிறுவனம், அதன் புதிய 'எலக்ட்ரா கிளைட் ஹைவே கிங்' என்ற லிமிடெட் எடிஷன் பைக்கை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பைக், 1968ல் வெளியான 'எப்.எல்.எச்., எலக்ட்ரா கிளைட்' பைக்கிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பைக்கில் இருப்பதைப் போன்ற வடிவமைப்பு, ப்யூயல் டெங்க், வயர் ஸ்போக் சக்கரங்கள் என பல அம்சங்கள் இந்த புதிய பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

இரு நிறங்களில் வரும் இந்த பைக்கின் சிறப்பம்சமே, பிரபலமான 1,868 சி.சி., மில்வாக்கீ எட்டு, வி - டுவின் இன்ஜின் தான். இரு சிலிண்டர்கள் கொண்ட இந்த இன்ஜின், கிட்டத்தட்ட 95 பி.எஸ்., பவரையும், 165 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த பைக், இந்திய சந்தையில் வெளியிடப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement