Load Image
Advertisement

குறைந்த விலை மின்சார கார் 'எம்.ஜி.,'யின் மினி ஹேட்ச்பேக்

'எம்.ஜி., இந்தியா' நிறுவனம், அதன் 'காமெட்' என்ற சிறிய ரக ஹேட்ச்பேக் காரை இந்திய சந்தையில் களமிறக்கியதோடு, இதன் வரிசையில் இருக்கும் கார் வகையை அறிவித்துள்ளது. இந்த கார், 'பேஸ், ப்ளே மற்றும் பிளஷ்' ஆகிய மூன்று வகையில் வருகின்றன.

இது ஹேட்ச்பேக் கார் என்பதால், இந்த காருக்கு போட்டியாக, 'டாடா டியாகோ மற்றும் சிட்ரான் இ.சி.,--3' கார்கள் களத்தில் உள்ளன. இருப்பினும், நாட்டின் மிகக் குறைந்த விலை மின்சார கார் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது இந்த காமெட் கார்.

நீளத்தில் 3 மீட்டருக்கு குறைவாக இருக்கும் இந்த கார், 'டாடா நேனோ'வை விட நீளம் குறைவாகவும், 'மாருதி ஆல்டோ 800' காரை விட அகலம் அதிகமாகவும் காணப்படுகிறது.

மிகச் சிறிய 12 அங்குல சக்கரங்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.25 அங்குல இன்போடெயின்மென்ட் அமைப்பு, ஏ.பி.எஸ்.,சுடன் கூடிய இ.பி.டி., பாதுகாப்பு வசதி, 50:50 ஸ்பிளிட் சீட்டுகள், முன்புற டூயல் ஏர் பேக் உட்பட பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது இந்த கார்.
விலை ரூ. 7.98 லட்சம் முதல் ரூ. 9.98 லட்சம் வரை

பேட்டரி 17.3 கி.வாட்.,ஹார்ஸ் பவர் 42 பி.எஸ்.,டார்க் 110 என்.எம்.,ரேஞ்ச் 230 கி.மீ.,



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement