Load Image
Advertisement

மூன்று சக்கர சி.என்.ஜி., வாகனம் களமிறக்கிய 'பியாஜியோ'

'பியாஜியோ' நிறுவனம், அதன் புதிய 'ஏப் எக்ஸ்ட்டிரா எல்.டி.எக்ஸ்.,' என்ற மூன்று சக்கர வர்த்தக வாகனத்தை இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளது. இந்த வாகனம் சி.என்.ஜி., வகையில் வருகிறது.

மூன்று வால்வ் தொழில்நுட்பம் கொண்ட 230 சி.சி., ஏர் கூல்டு இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், அதிக எடையை சுமந்து செல்ல உதவுவதோடு, அதிக செயல்திறனை தந்து, பராமரிப்பு செலவையும் குறைக்கிறது.

கூடுதலாக, மேம்பாலங்கள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் எளிதாக பயணிக்க 26 சதவீதம் அளவிற்கு திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் 56 கி.மீ., ஆக இருக்கிறது. மேலும், 1 லட்சம் கி.மீ., அல்லது 3 ஆண்டுகள் வரை இந்த வாகனத்திற்கு இந்நிறுவனம் உத்தரவாதம் வழங்குகிறது.
விலை ரூ. 2.51 லட்சம்

இன்ஜின் 230 சி.சி., ஆர் கூல்டு, சி.என்.ஜி.,ஹார்ஸ் பவர் 9.59 பி.எஸ்.,டார்க் 17.1 என்.எம்.,டாப் ஸ்பீடு 56 கி.மீ.,மைலேஜ் 40 கி.மீ.,



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement