Load Image
Advertisement

'எக்ஸ்டெர்' மினி எஸ்.யு.வி., 'ஹூண்டாய்' தொடுக்கும் 'அட்டாக்'

'ஹூண்டாய் மோட்டார் இந்தியா' நிறுவனம், 'எக்ஸ்டெர்' என்ற அதன் சிறிய ரக எஸ்.யு.வி., காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐந்து வகையில் வரும் இந்த காரை, 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காருக்கு, 'ஐ - 10 நியோஸ், வென்யு, ஆரா மற்றும் ஐ - 20' கார்களில் வழங்கப்படும், அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தான் வழங்கப்படுகிறது.

இந்த காரின் வடிவம், ஹூண்டாய் நிறுவனத்தின் பிரத்யேக பாக்ஸ் வடிவத்திலும், நிமிர்ந்த உடல் வாகையும் கொண்டு விளங்குகிறது. கூடுதலாக, எச் - வடிவ டி.ஆர்.எல்., லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள், காருக்கு பொருத்தமான கருப்பு கிரில், ஷார்க் பின் ஆன்டெனா, டூயல் டோன் அலாய் சக்கரங்கள், டூயல் டோன் நிறங்கள் என பல அம்சங்களில் இந்த கார் வருகிறது.

இந்த காரின் விலை, ஜூலை இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் ஆரம்பத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஜின் 1.2 லிட்டர், பெட்ரோல்ஹார்ஸ் பவர் 83 பி.எஸ்.,டார்க் 114 என்.எம்.,மைலேஜ் 18 - 20 கி.மீ.,



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement