இந்துகாந்த கஷாயத்தை பெரியவர்கள் 5 கிராம், சிறியவர்கள் 2.5 கிராம் கஷாயப் பொடியை 200 மில்லி நீரில் கொதிக்க வைத்து, கால் டம்ளராக வற்றியதும், இரு வேளை, உணவிற்கு முன், 21 நாட்கள் பருகலாம்.
இது, நல்ல ஜீரண சக்தியை தந்து, உடலில் ஏற்படும் அலர்ஜி போன்ற அறிகுறிகளை குறைக்கவல்லது.
மருத்துவரின் மேற்பார்வையில் அமுக்ரான் சூரணம் / அஸ்வகந்தா, குழந்தைகளுக்கு 200 மி.கிராம், பெரியவர்களுக்கு 500 மி.கிராம் அளவு இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என்று அரசு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கபம் அதிகமாக இருப்பவரோ, தைராய்டு பிரச்னை இருப்பவர்களோ, இதை டாக்டரின் அறிவுரைப்படியே எடுத்துக் கொள்ளலாம்.
- டாக்டர் சுதீர் ஐயப்பன்,ஆயுர்வேத மருத்துவர்,
சென்னை.
86101 77899
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!