'ஸ்கோடா இந்தியா' நிறுவனம், அதன் புது வகை 'குஷாக் ஆனக்ஸ்' எடிஷன் எஸ்.யு.வி., காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த காரின் வெளிப்புறத்தில், பழுப்பு நிற கிராபிக்ஸ் டிசைன் வழங்கப்பட்டுள்ளதோடு, காரின் 'பி பில்லர்' பகுதியில் ஆனக்ஸ் எடிஷனை குறிக்கும் வகையில் விசேஷ அடையாளமும் பொறிக்கப்பட்டுள்ளது. அத்துடன், க்ரோமால் ஆன பிரண்ட் கிரில், 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளன.
உட்புறத்தில், கறுப்பு மற்றும் சிவப்பு நிற தோற்றம், இரு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல், 7 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 6 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் உட்பட பல அம்சங்கள் இந்த காரில் இருக்கின்றன.
கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை பெற்ற இந்த காரில், இரட்டை பாதுகாப்பு பைகள், ஏ.பி.எஸ்சுடன் கூடிய இ.எஸ்.பி., பாதுகாப்பு வசதி, 3 பாயின்ட் சீட் பெல்ட்டுகள், டயர் பிரஷர் மானிட்டரிங் அமைப்பு என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராகவும் இது விளங்குகிறது.
இந்த காரின் விலை, 12.39 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விபரக் குறிப்புஇன்ஜின்: 1 லிட்டர், டர்போ பெட்ரோல்ஹார்ஸ் பவர்: 115 பி.எஸ்.,டார்க்: 178 என்.எம்.,மைலேஜ்: 19.2 கி.மீ.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!