'போக்ஸ்வேகன் இந்தியா' நிறுவனம், அதன் 'விர்டூஸ்' செடான் காரை புதுப்பித்துள்ளது.
இதன், 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள், பி.எஸ் 6 இரண்டாம் கட்ட விதிமுறைகளுக்கு ஏற்றவாறும், எத்தனால் கலப்பு எரிவாயுவில் இயங்கும் வகையிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ரக விர்டூஸ் கார்களுக்கும் பின்புற பாக் லைட்டுகள் அத்தியாவசியப் படுத்தப் பட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை.
கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களைக் கொண்ட இந்த காரில், 6 பாதுகாப்பு பைகள், ஏ.பி.எஸ்சுடன் கூடிய இ.எஸ்.பி., பாதுகாப்பு வசதி, டிராக்ஷன் கன்ட்ரோல் வசதி உட்பட 40க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் கொண்டுள்ளது.
இந்த காரின் விலை, அதன் வகையைப் பொறுத்து, 11.32 லட்சம் ரூபாய் முதல் 18.32 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விபரக் குறிப்புஇன்ஜின் (பெட்ரோல்): 1 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ 1 லிட்டர், 4 சிலிண்டர் டர்போஹார்ஸ் பவர்: 115 பி.எஸ்., 149 பி.எஸ்.,டார்க்: 178 என்.எம்., 250 என்.எம்.,மைலேஜ்: 19.4 கி.மீ., 19 கி.மீ.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!