Load Image
Advertisement

'ஆர் - 18  டிரான்ஸ்கான்டினென்டல்' 'பி.எம்.டபுள்யு'வின் க்ரூசர் பைக்

'பி.எம்.டபுள்யு மோட்டோராட்' நிறுவனம், அதன் ஆர் -18 வரிசையில்,'டிரான்ஸ்கான்டினென்டல்' என்ற க்ரூசர் பைக்கை இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளது. தற்போது, மூன்று வகை ஆர் - 18 பைக்குகள் சந்தையில் இயங்கி வரும் நிலையில், நான்காவதாக இந்த பைக் வெளியிடப்பட்டுள்ளது.

பெரிய ஹேண்டில் பாருடன் கூடிய விண்ட்ஸ்கிரீன், 10.25 அங்குலம் டி.எப்.டி டிஸ்ப்ளே, 6 ஸ்பீக்கர்களோடு சவுண்டு சிஸ்டம், ஆக்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், சாவியின்றி பயணிக்கும் வசதி, ஹில் ஸ்டார்ட் கன்ட்ரோல் வசதி உட்பட பல ஆடம்பர அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வகை ஆர் - 18 பைக்கிற்கு, ஆலாய் சக்கரங்கள் அத்தியாவசியப் படுத்தப் பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களின் பைக்குகளை உருமாற்றிக்கொள்ளும் வசதியையும் பி.எம்.டபுள்யு நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மொத்தம் 5 நிறங்களில் வரும் இந்த பைக்கின் விலை, 31.50 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விபரக் குறிப்புஇன்ஜின்: 1,802 சி.சி.,ஹார்ஸ் பவர்: 91 பி.எஸ்.,டார்க்: 158 என்.எம்.,



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement