'பஜாஜ் ஆட்டோ' நிறுவனம், அதன் 'பல்சர் என்.எஸ்., 160' பைக்கை புதுப்பித்து, இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
என்.எஸ்., 200 பைக்கை ஒப்பிடும் போது, எந்த வித்தியாசமும் தெரியாத அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்ஜினை தவிர மற்ற அனைத்து அம்சங்களும், இரு பைக்குகளுக்கும் ஒன்று தான்.
அதாவது, பைக்கின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்க டெலஸ்கோபிக் போர்க் சஸ்பென்ஷனுக்கு பதிலாக 33 எம்.எம்., அப்சைட் டவுன் போர்க், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., பாதுகாப்பு வசதி ஆகியவை இந்த என்.எஸ்., 160 பைக்கில் அத்தியாவசியப் படுத்தப் பட்டுள்ளன.
மேலும், புதிய கிரிமேகா பிரேக்குகள், என்.எஸ்., 200 பைக்கில் இருப்பதைப் போன்ற அதே பெரிய டயர்கள், 17 அங்குல சக்கரங்கள் ஆகியவை பைக்கின் எடையை 1 கிலோ உயர்த்தி இருந்தாலும், செயல்திறன் மேம்பட்டுள்ளது.
இந்த பைக்கின் விலை, 1.35 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விபரக் குறிப்புஇன்ஜின்: 160.3 சி.சி., ஆயில் கூல்டு இன்ஜின்ஹார்ஸ் பவர்: 17.2 பி.எஸ்.,டார்க் 14.6 என்.எம்.,டாப் ஸ்பீடு: 120 கி.மீ.,மைலேஜ்: 45 கி.மீ.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!