மூன்று பருவமும் நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கம்மவார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜி.ஜெயச்சந்திரன் கூறியதாவது:
எனக்கு சொந்தமான நிலத்தில், உள்ளூர் மற்றும் ஆந்திர ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். பொதுவாக, சம்பா, நவரை,சொர்ணவாரி ஆகிய மூன்று பருவத்தில், இடைவெளி இன்றி நெல் சாகுபடி செய்து வருகிறேன்.
பொதுவாக, விளை நிலத்தில் இடைவெளி இன்றி, நெல் சாகுபடி செய்யும் போது, குறைந்த மகசூலே எடுக்க முடியும். ஏதேனும் ஒரு பருவத்தில் நிலத்தை காலியாக விட்டால் தான், அடுத்த பருவத்திற்கு நெல் சாகுபடி செய்யும் போது, கூடுதல் நெல் மகசூல் எடுக்க முடியும்.
இதைத் தவிர்க்க, நவரை பருவத்தின் நெல் அறுவடை முடிந்த பின், மார்ச் மாதத்தில் நிலத்தை புழுதி ஓட்டி விடுவேன். அடிக்கிற வெயிலுக்கு, மண்ணில் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகள் இறந்துவிடும். கோடை மழைக்கு பின், நெல் நடவு செய்வேன்.
இது போல, நெல் சாகுபடி செய்யும் போது, சீரான நெல் விளைச்சலுக்கு வழி வகுக்கும். நிலத்தின் மண் வளமும் காக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு:
--ஜி.ஜெயச்சந்திரன்,
99431 55446.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!