ரோஜா தோட்டத்திற்கு, பாகர் தெளிப்பு நீர் கருவி அமைப்பு குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.தனஞ்செயன் கூறியதாவது:
எனக்கு சொந்தமான நிலத்தில், பெங்களூரு ரோஸ், பட்டன் ரோஸ், டில்லி கனகாம்பரம் ஆகிய குளிர் பிரதேச மலர்களை சாகுபடி செய்துள்ளேன். இந்த மலர்களுக்கு, இயற்கை உரம் மற்றும் பயிர் ஊக்கிகளை வழங்கி வருகிறேன்.
இருப்பினும், கோடை காலத்தில் ரோஜா செடி மற்றும் பூ கருகும் விதத்தை தடுக்க முடியாது. இதை தடுக்க பசுமை நிழல் வலை குடில் மற்றும் தெளிப்பு நீர் கருவி அமைக்கும் யுத்திகளை கையாளலாம்.
குறிப்பாக, ரோஜா தோட்டத்தில் 'பாகர்' என, அழைக்கப்படும் பனித் துளிகளை போல் தண்ணீரை தெளிக்கும் கருவி அமைக்க வயல் முழுதும் கட்டமைப்பு ஏற்படுத்தி உள்ளேன்.
இதற்கு வரப்பு ஓரங்களில் மட்டுமே இரும்பிலான 'பைப்' அமைக்க வேண்டும். ரோஜா தோட்டத்திற்கு இடையே, கம்பிகளில் கட்டி தொங்க விட வேண்டும். கோடை காலங்களில் இழப்பு இன்றி, ரோஜாவில் வருவாய்க்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: எம்.தனஞ்செயன்,
88257 46684.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!