வால் மிளகு சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ராஜீவ்காந்தி கூறியதாவது:
எனது தோட்டத்தில், மா, பலா, கொய்யாஉள்ளிட்ட பலவித பழ செடிகளை நட்டுள்ளேன். இதன் மூலமாக ஆண்டு தோறும் கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன்.
வரப்பு பயிராக வேங்கை, தேக்கு, மகாகனி, ஈட்டி உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்துள்ளேன். இதில், வேங்கை மரத்தில் ஊடு பயிராக வால் மிளகு கொடி ஏற்றியுள்ளேன். குறிப்பாக, வேங்கை மரத்தின் உயரத்திற்கு, வால் மிளகு கொடி ஏற்ற முடியாது.
வேங்கை மரத்தின் பாதியில் பந்தல் போல் அமைத்து, கொடியை திருப்பிவிட வேண்டும். அப்போது தான் வால் மிளகு பறிக்கவும் சவு கரியமாக இருக்கும்.
வால் மிளகு இன்னும் மகசூலுக்கு வரவில்லை. வந்தால், மரப்பயிரில் ஊடுபயிராக எவ்வளவு வருவாய் கிடைக்கிறது என, தெரிய வரும்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி
89402 22567
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!