'நீலிஷா' ரக மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் முன்னோடி விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
எங்களுக்கு சொந்தமான மணல் கலந்த களி மண் நிலத்தில், 'நீலிஷா' ரக மாம்பழம் சாகுபடி செய்துள்ளேன். இது, நீலம், பங்கனபள்ளி ஆகிய இரு மா மரங்களில் இருந்து, எடுக்கப்பட்ட ஒட்டு ரக செடியாகும்.
இந்த மாஞ்செடிகள் மிகவும் குட்டையாக இருப்பதால், மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களிலும் வளர்க்கலாம்.மூன்று ஆண்டுகளில், 'நீலிஷா' ரக மாம்பழம் அறுவடைக்கு வரும். குறிப்பாக, பிற ரக மா மரங்களை போல, உயரமாக வளராது.
குட்டையாக இருப்பதால், பழங்கள் பறிப்பதற்கு எளிதாக இருக்கும்.
மேலும், ஒரு மாம்பழத்தின் எடை, 300 கிராம் எடையுடன் இருக்கும். அதிக மஞ்சள் நிறம் மற்றும் கூடுதல் சுவையுடன் இருப்பதால், விவசாயிகள் கூறும் விலைக்கு, பழங்களை சந்தையில் விற்பனை செய்யலாம். பழங்களை வாங்கி செல்வோரும், தயக்கம் இன்றி வாங்குவார்கள்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: கே.சசிகலா,
89391 88682.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!