* யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் - பெல்லிக்கு தமிழக அரசு லட்ச ரூபாய் பரிசு வழங்கி பாராட்டுது; சந்தோஷம்! இதுல யோசிக்க என்னன்னா, நம்ம ஊழியர்களோட உழைப்புக்கு நம்ம அரசோட அங்கீகாரம் கிடைக்க, 'ஆஸ்கர்' தேவைப்படுது; ஒருவேளை, 'ஆஸ்கர்' விருது கிடைக்காம இருந்திருந்தா, பொம்மனும் பெல்லியும் நமக்கு யார்?
* துவக்கப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிப்பு, முதல்வரின் காலை உணவு திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாம்! 'பட்டினியா இருந்தாலும் படிக்க வருவேன்'னு அறிவுப்பசியோடு பள்ளிக்கு வந்த மாணவர்களை முதல்வர் பார்த்ததால பிறந்த திட்டம், இப்போ உணவுக்காக மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்குதுன்னா... இது என்ன மாதிரியான வெற்றி!
* 'யார், என்ன காரணமானாலும் தற்கொலை என்பது ஏற்கத்தக்கது அல்ல!' - இப்படி தீர்க்கமாகவும், தெளிவாகவும் சொல்ற தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ஒரு கேள்வி... 'தற்கொலை பண்ணிக்கிட்ட அரியலுார் அனிதா பெயரை மருத்துவ கல்லுாரி அரங்கத்துக்கு சூட்டினதுல உங்களுக்கு உடன்பாடா?
* 'டாஸ்மாக் இயங்குறதாலதானே என் அப்பா குடிச்சுட்டு வந்து அம்மாவை துன்புறுத்துறார்னு, கடையில பெட்ரோல் குண்டு வீசின காரைக்குடி நபர் கைது; சம்பவத்துல பலியான கடை ஊழியரோட குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை உத்தரவாதம், மக்கள் பணத்துல 10 லட்ச ரூபாய் நிவாரணம்! ஆக... 'டாஸ்மாக்' தொடர்ந்து இயங்கும்!
ஆண்டவா... அந்த 1,000 ரூபாயும் அதுக்குதானா?
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!