தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
காய்கறி கூடையை சுமந்து 50 தெருவுக்கு அலைஞ்சு திரிஞ்ச தெம்பான ஆளுய்யா நான்! இப்போ, எச்.ஐ.வி., நோயாளி!
மார்ச் 8, 2018; கர்ப்பிணியான எனக்கு மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துல நடந்த ரத்த பரிசோதனை முடிவு, 'ரத்தசோகை' பிரச்னைன்னு சொல்ல, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு என்னை அனுப்பினாங்க! அங்கே, ஏப்ரல் 5ம் தேதி எனக்கு ரத்தம் ஏத்தி, ஒரு வாரம் உள்நோயாளியா வைச்சிருந்தாங்க! நிறைமாத பரிசோதனையில, 'எச்.ஐ.வி., தொற்று இருக்கு'ன்னு அதிர்ச்சி தகவல்!
ஊடகங்கள் உதவியோட நியாயம் கேட்டேன். 'ரத்தம் ஏத்தினதுல தவறு நடக்கலை'ன்னு டீன் சொன்னாங்க! ஆனா, மூணே மாசத்துல தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஒப்பந்த ஊழியர் பணியில சேரச்சொல்லி உத்தரவு வந்தது. இப்போ, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில பணி!
நிரந்தர பணியும், குழந்தைகளோட எதிர்காலத்துக்கு உத்தரவாதமும் கேட்டு நிறைய மனு கொடுத்துட்டேன். உங்க தனிப்பிரிவுல 2021 ஜூலை மாதமும் (மனு எண் - யு/79304) கொடுத்திருக்கேன்; இதுவரைக்கும் எந்த பதிலும் இல்லை!
நான் என்னய்யா தப்பு பண்ணினேன்?
- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அலட்சியமே, தான் எச்.ஜ.வி., நோயாளியாக காரணம் எனும் மனக்குமுறலுடன் வாழ்நாட்களை எண்ணி வரும் 36 வயது பெண், மாங்காடு, காஞ்சிபுரம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!