நான் சான்யா; என் ஊரு கல்பனா சாவ்லா பிறந்த கர்னால்; ஆணுறை தயாரிப்பு நிறுவனத்துல தர நிர்ணய அலுவலரா இருக்குறேன்!
'சார்... பள்ளி பாடத்திட்டத்துல மனித இனப்பெருக்கம், பாதுகாப்பான பாலுறவு பற்றிய பாடங்கள் அவசியம் இருக்கணும்; ஆனா, தேர்வு வினாத்தாள்ல கட்டாயம் விடையளிக்க வேண்டிய பிரிவுல அதைப்பற்றின கேள்விகள் இல்லை! கேள்வி இருந்தாத்தானே ஆசிரியர்கள் அதைப்பற்றி விளக்கமா சொல்லிக் கொடுப்பாங்க; மாணவர்களுக்கும் ஒரு தெளிவு வரும்!'
'மேடம்... கர்னால் மாவட்டத்தோட அடையாளம் கல்பனா சாவ்லாவும், குத்துச்சண்டை வீரர்களும்தான்; ஆணுறை தயாரிப்பாளர்கள் இல்லை! கடந்த 25 ஆண்டுகள்ல எங்க பள்ளியில இருந்து 9 குத்துச்சண்டை வீரர்களை தேசிய அளவுல உருவாக்கி இருக்குறோம்!'
'சரி சார்... கடந்த 25 ஆண்டுகள்ல உங்க பள்ளியில படிச்ச எத்தனை பெண்கள் கருக்கலைப்பு செஞ்சிருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா; 300க்கும் அதிகமான பெண்கள் கருக்கலைப்பு செஞ்சிருக்காங்க; அதுல பாதிக்கப்பட்டு, 12 பேர் இறந்துட்டாங்க!'
இவ்வளவு சொல்லியும் அந்த பள்ளி முதல்வர் என் கருத்தை ஏத்துக்கலை!
வளரும் பருவத்துல மாணவ சமூகத்துக்கு உடல்ரீதியா நிறைய குழப்பங்கள் இருக்கும்; அதை தீர்க்க வேண்டியது ஆசிரியர், பெற்றோருடைய பொறுப்பு; ஆனா, இந்த விஷயத்துல அவங்க பின்தங்கி இருக்கிறது நான் உணர்ந்த நிஜம்.
படம்: சத்ரிவாலி (ஹிந்தி)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!