தேவையானவை: வாழைப்பழம் - 1, கொய்யா பழம் - 1, சப்போட்டா பழம் - 1, கிர்ணி பழத்துண்டுகள் - ஒரு கிண்ணம், ஆரஞ்சு சுளைகள் - 10, புளிக்காத தயிர் - 200 மி.லி., சர்க்கரை - 100 கிராம்.
செய்முறை: வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். கொய்யா பழத்தை தோல் சீவி, சிறு துண்டுகளாக்கவும், சப்போட்டா மற்றும் கிர்ணி பழத்தின் தோல் உரித்து, விதை எடுத்துக் கொள்ளவும்.ஆரஞ்சு சுளைகளை மெல்லிய தோல் நீக்கி, விதை எடுத்து, எல்லாவற்றையும் மிக்சியில் அரைத்து, தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து, 10 நிமிடம், பிரிஜ்ஜில் வைக்கவும்.
அருமையான பழ லஸ்சி தயார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!