'பஜாஜ் ஆட்டோ' நிறுவனம், இந்தியாவில் பிரபலமான அதன் நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான, 'பல்சர் என்.எஸ்.,- 200' பைக்கை புதுப்பித்து, மீண்டும் சந்தையில் களமிறக்கியுள்ளது.
தற்போது, சந்தையில் இயங்கி வரும் என்.எஸ்., - 200 பைக்கை ஒப்பிடும் போது, இந்த பைக்கின் வசதி மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, பைக்கின் நிலைத்தன்மையை உயர்த்தும் புதிய அப்ஸைடு போர்க் சஸ்பென்ஷன், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., பாதுகாப்பு அமைப்பு ஆகியவை அத்தியாவசியப் படுத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக இம்முறை, குறைந்த எடை கொண்ட சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளதால், கிட்டத்தட்ட பைக்கின் எடை 1 கிலோ குறைகிறது. இதனால், இன்ஜின் திறன் அதிகரிப்பதோடு, பைக்கின் மைலேஜும் சிறிதளவு உயருகிறது. இந்த வகை பல்சர் பைக்கின் விலை, முந்தைய என்.எஸ்., 200 பைக்கை விட 7 ஆயிரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரூ. 1.47 லட்சம்
விபரக்குறிப்பு
இன்ஜின் - 199.5 சி.சி., லிக்விட் கூல்டு, ப்யூயல் இன்ஜெக்ஷன்
ஹார்ஸ் பவர் - 24.5 பி.எஸ்.,
டார்க் - 18.5 என்.எம்.,
டாப் ஸ்பீடு - 136 கி.மீ.,
மைலேஜ் - 40 கி.மீ.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!