'ராயல் என்பீல்டு' நிறுவனம், அதன் 'காண்டினெண்டல் ஜி.டி., 650' க்ரூஸர் பைக்கை புதுப்பித்து, இந்திய சந்தையில் மீண்டும் களமிறக்கி உள்ளது. இந்த பைக், மொத்தம் ஆறு நிறங்களில் வெளியாகிறது.
தற்போது, சந்தையில் இயங்கி வரும் காண்டினெண்டல் பைக்கை ஒப்பிடும் போது, எல்.இ.டி., லைட்டுகள், நவீன ஸ்விட்ச் கியர், அலாய் சக்கரங்கள், புதிய டயர்கள், யு.எஸ்.பி., சார்ஜிங் போர்ட் என பல அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அலாய் சக்கரங்கள், பழுப்பு மற்றும் நீல நிற பைக்குகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
மற்றபடி, வேறு எந்த தொழில்நுட்ப அம்சங்களும் மாற்றப்படவில்லை. இந்த பைக்கின் விலை, தற்போது, 14 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 3.19 லட்சம் ரூபாய் முதல் 3.45 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விபரக் குறிப்புஇன்ஜின் - 648 சி.சி.,ஹார்ஸ் பவர் - 47.5பி.எஸ்.,டார்க் - 52 என்.எம்.,டாப் ஸ்பீடு - 161 கி.மீ.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!