'வெறி கொண்ட வேங்கை' 'லாம்போர்கினி'யின் ஸ்போர்ட்ஸ் கார்
'லாம்போர்கினி' நிறுவனம், அதன் 'அவென்டெடா' காரின் அடுத்த பரிணாமமான, 'எல்.பி., - 744' என்ற ஸ்போர்ட்ஸ் காரை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த காரின் சிறப்பம்சமே, கதிகலங்க வைக்கும் இதன் 6.5 லிட்டர் இன்ஜின் தான். இந்த இன்ஜின், கிட்டத்தட்ட 12 சிலிண்டர்களை கொண்டுள்ள நிலையில், அனைத்தும் 'வி' வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், கார் இன்ஜினுக்கான இடம் குறைவது மட்டுமின்றி, குறைந்த ஆர்.பி.எம்.,ல் அதிக டார்க்கை உற்பத்தி செய்து, மிக சக்தி வாய்ந்த ஹார்ஸ் பவரையும் வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த காரின் விசேஷ உறுமல் சத்தத்தை பாதுகாக்க, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காரில், ஹைபிரிட் பவர் டிரைன் இருப்பதால், 30 சதவீதம் குறைந்த உமிழ்வுகளை வெளிப்படுத்தி, காற்று மாசுபாட்டை குறைக்கிறது.
இந்த காரின் விலை குறித்த எந்த தகவலையும் லாம்போர்கினி நிறுவனம் வெளியிடவில்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!