'ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா' நிறுவனம், அதன் முதல் 100 சி.சி., பைக்கான 'ஷைன்' பைக்கை களமிறக்கியுள்ளது. இந்த பைக், ஐந்து நிறங்களில் வருவதோடு, இதன் முன்பதிவுகளும் தற்போது துவங்கப்பட்டுள்ளன.
இந்த பைக், வலுவான 'டைமண்ட் பிரேம்' கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பைக்கின் ஸ்திரத்தன்மைக்காக, முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க் சஸ்பென்ஷனும், பின்புறம் டுவின் ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இது 100 சி.சி., பைக் என்பதால், இரு சக்கரங்களுக்கும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கரடுமுரடான சாலைகளை எளிதாக கடப்பதற்கு, கிரவுண்ட் கிளியரன்ஸ் 168 எம்.எம்., வரை கொடுக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஹெலோஜன் ஹெட் லைட், காம்பி பிரேக்கிங் அமைப்பு, இன்ஜின் திறனை அதிகரிக்கும் ப்யூல் இன்ஜெக்ஷன், பைக்கை எளிதாக ஸ்டார்ட் செய்ய ஆட்டோ சோக் வசதி உட்பட பல அம்சங்கள் இந்த பைக்கில் இருக்கின்றன.
இந்த பைக்கின் விலை, 64,900 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விபரக் குறிப்புஇன்ஜின் - 99.7 சி.சி., ஏர் கூல்டுஹார்ஸ் பவர் - 7.6 பி.எஸ்.,டார்க் - 8.05 என்.எம்.,மைலேஜ் - 65 கி.மீ.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!