'மாருதி சுசூகி' நிறுவனம், அதன் சி.என்.ஜி., வகை 'பிரெஸ்ஸா' எஸ்.யு.வி., காரை இந்திய சந்தையில் அறிமுகப் படுத்தியுள்ளது. மாருதியின் 14வது சி.என்.ஜி., வகை காரான 'பிரெஸ்ஸா' கார், மூன்று ரகங்களில் வெளியாகிறது.
இந்த காருக்கு, எந்த ஒரு டிசைன் மாற்றங்களும் செய்யப்படவில்லை. இன்ஜினைப் பொறுத்த வரையில் 'எர்ட்டிகா மற்றும் எக்ஸ்.எல்., - 6' ஆகிய கார்களில் இருப்பதைப் போன்ற, 1.5 லிட்டர், கே.15.சி., டூயல் ஜெட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
எரிவாயு செலவை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின், மிக அதிகமான, 25.51 கி.மீ., வரை மைலேஜ் தருகிறது. இந்த காரின் அதிகபட்ச வகை காரான, 'இசட்.எக்ஸ்.ஐ.,' வகை காருக்கு மட்டும், 7 அங்குல டச் ஸ்கிரீன், ஒயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதி, சன் ரூப், க்ரூஸ் கன்ட்ரோல் உட்பட சில அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.
பிரெட்சா' எஸ்.யு.வி., அதன் வகையைப் பொறுத்து விலை ரூ. 9.14 லட்சம் - 11.90 லட்சம் வரை
விபரக் குறிப்பு
இன்ஜின் - 1.5 லிட்டர், கே.15.சி., டூயல் ஜெட்
ஹார்ஸ் பவர் - 88 பி.எஸ்.,
டார்க் - 121.5 என்.எம்.,
மைலேஜ் - 25.51 கி.மீ.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!