தென்னை குருத்து நோய் கட்டுப்படுத்தும் முறை குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வே.பரசுராமன் கூறியதாவது:
எங்களுக்கு சொந்தமான நிலத்தில், பல வித ரக நெல் பயிர் செய்து வருகிறேன். இதுதவிர, பலா, மா, தென்னை உள்ளிட்ட வருவாய் தரும் பணப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன்.
தென்னை வளர்ப்பில், காண்டாமிருக வண்டால், குருத்து அரிப்பு ஏற்படும். மேலும், குலை தள்ளும் போது, பிஞ்சு உதிரும் நோய் கண்டறித்து தடுக்கலாம்.
இதுபோன்ற நோய் தாக்கத்தை தடுக்க, ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, இயற்கை உரங்களை பயன் படுத்தலாம். உதாரணமாக, குருத்து அரிக்கும் காண்டாமிருக வண்டு கட்டுப்படுத்துவதற்கு, தென்னை மட்டை நடுவே ரசகற்பூரத்தை வைக்கலாம்.
பிஞ்சு உதிர்வதை தடுக்க, உப்பு மற்றும் மஞ்சள் கலந்து செடிகளுக்கு, அடியுரமாக வழங்கலாம். இந்த சிறு தொழில் நுட்பத்தின் வாயிலாக, தென்னை சாகுபடியில் சேதம் இன்றி வருவாய்க்கு வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: வே.பரசுராமன்,
99521 23682.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!