உருளை வடிவ களை எடுக்கும் கருவி தயாரிப்பு குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியத்தை அடுத்த, நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:
நான் பல வித பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். நெல் நடவு செய்யும் போது, வரிசை நடவு மற்றும் பயறு வகை பயிர் செய்யும் போது, பாத்தி முறை சாகுபடியை பின்பற்றி வருகிறேன்.
பொதுவாக, நெல் வயலில் புற்களின் வளர்ச்சி தான் அதிகமாக காணப்படும் என, கூறுவார்கள். அதை கட்டுப்படுத்த ரசாயன உரங்களை தெளித்தாலும் புற்களின் வளர்ச்சி தடுக்க முடியவில்லை என, பல விவசாயிகள் புலம்புகின்றனர்.
இதை தடுக்க வேளாண் துறையில், முக்கோண வடிவில் களை எடுக்கும் கருவி வழங்கி உள்ளனர். இதன் வாயிலாக புல் கட்டுப்படுத்தி விடலாம் என, தொழில்நுட்ப வல்லுனர்கள் வினியோகம் செய்து வருகின்றனர்.
இதை பயன்படுத்தும் போது தான், பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது.
இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க, உருளை வடிவ களை எடுக்கும் கருவி தயாரித்துள்ளேன். இதை, நெல் வயலில் பயன்படுத்தும் போது சிறுவர்கள் கூட எளிதாக கையாளலாம். அந்த அளவிற்கு சிறப்பு அம்சங்கள் உள்ளன. விவசாயிகள் வடிவமைத்து பயன் பெறலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன்,
96551 56968.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!