அரசு அதிகாரிகள் மேஜையில மக்களோட கோரிக்கை மனுக்கள் மாதக்கணக்கா, ஆண்டுக்கணக்கா காத்திருந்தாலும், 'பரிசீலனையில் இருக்கிறது'ன்னு பதமா சொல்லணும்; அதுவே, சட்ட மசோதாக்கள் கவர்னர் ஒப்புதலுக்காக காத்திருக்குதுன்னா, 'கவர்னர் கிடப்புல போட்டுட்டார்'னு கூப்பாடு போடணும்; சரிதானுங்களே?
'டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது பற்றி...'ன்னு முதல்வர் ஸ்டாலின்கிட்டே கேள்வி எழுப்பப்படுது; 'பா.ஜ.,வின் வெளிப்படையான மிரட்டல் இது'ன்னு அவர் பதில் சொல்றார்! இதுவே, 'மணீஷ் சிசோடியா குற்றமற்றவர்னு நீங்க நம்புறீங்களா'ன்னு கேள்வி எழுப்பியிருந்தா முதல்வர் என்ன சொல்லி இருப்பார்?
'மானிய விலையில உரம் வாங்குறப்போ விவசாயியோட ஜாதிப்பிரிவு சொல்லணும்!' - அரசு! 'சமூக நீதி' ஆட்சியில எதுக்காக இந்த ஜாதி விபரம்; நல்லாயிருக்கே... 'இலவச பேருந்து' பயன்படுத்துற பெண்கள் சதவீதத்தை, ஜாதி அடிப்படையில தரம் பிரிச்சு திட்டக்குழு சொன்னப்போ, 'இந்த விபரம் எதுக்கு'ன்னு கேட்டோமா என்ன!
ஹிந்து மத நம்பிக்கையை பாதுகாக்க, பரப்ப 3,000 கோவில்களை கட்டச் சொல்லி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவாம்! சபாஷ்... 'ஹிந்து மதத்திற்கு நான் எதிரானவன் அல்ல'ன்னு அல்வா கிண்டாம, 'கும்பாபிஷேகம் பண்றேன் பார்'னு படம் காட்டாம, ஹிந்து மதத்தின் மீதான த ன் அ ன்பை ஜெகன் புரிய வைச்சிட்டார்!
'எல்லாருக்கும் எல்லாமும்' கொடு இறைவா!
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!