Load Image
Advertisement

24/7 மகிழ்ச்சி!

சிறுவன் ஒருவன் தடுமாறி விழ, 'எப்போது உதவலாம்?' என காத்திருந்தது போல் ஓடிச்சென்று அவனை துாக்கி நிறுத்துகிறது மழலை பட்டாளம்!

'இந்த வயசுல இப்படி ஒரு மனசா?' - கோவை சரவணம்பட்டி 'டைனோ கிட்ஸ்' மழலையர் பள்ளி வளாகத்தில் நாம் ஆச்சரியப்பட்டு நிற்க, நம்மை வரவேற்று அந்நிகழ்வின் பின்னணி சொன்னார் பள்ளி நிறுவனர் ராதிகா செல்வராஜ்.

'நற்குணம், சிந்தனை, சுத்தம் அடிப்படையில தினம் ஒரு குழந்தைக்கு 'ஸ்டார் ஆப் த டே' பட்டம் தர்றது என் வழக்கம்; அந்த பட்டத்துக்கான போட்டிதான் இது! 'நீ அழும்போது என்னை மட்டும் கூப்பிடு; நான் வந்து கண்ணீர் துடைச்சு விடுறேன்! நீ எப்போ பென்சில் தொலைப்பே; உனக்காக நான் ஒண்ணு வைச்சிருக்கேன்'னு இப்போ விதவிதமா பசங்க கலக்கிட்டு இருக்குறாங்க!

அப்பளக்கூத்து

இந்த பள்ளியில, 'ஜங்க் புட்ஸ்' கொண்டு வரக்கூடாதுங்கிறது விதி! ஸ்கூலுக்கு புறப்பட தாமதமாயிருச்சுன்னு ஒருநாள் சாதத்துக்கு தொட்டுக்க அப்பளம் கொண்டு வந்துட்டேன்; அவ்வளவுதான்... 'எங்களுக்கு 'நோ' சொல்லிட்டு நீங்க மட்டும்...'னு ஆரம்பிச்சு நிறைய கேள்விகள்! அப்பளம் 'ஜங்க் புட்' வகையறான்னு அன்னைக்கு வரைக்கும் நான் யோசிக்கலை!

என் பிருந்தாவனம்

* தப்பு பண்ற குழந்தைகளை என் பார்வையில பத்து நிமிஷம் நிற்க வைக்கிற தண்டனைக்கு பேரு... நாட்டி கார்னர். பத்து நிமிஷம் நின்னதுக்கு அப்புறம், 'உங்க கூட இங்கேயே நின்னுக்கவா'ன்னு அவங்க கெஞ்சுறது அவ்வளவு கியூட்!

* 'ராதிகா மேடம் கொடுக்கிற நட்ஸ் ஸ்கொயரா இருக்கும்; இது அப்படி இல்லையே...'ன்னு வீட்டுல நட்ஸ் சாப்பிடாம தப்பிக்கிற குறும்பு!

* 'உனக்கும் விரல்கள் இருக்குதானே... நீயே சாப்பிடலாமே'ன்னு சொன்னா, 'நான் சாப்பிட்டா ருசியா இல்லை... கசக்குது'ன்னு மயக்குற அழகு!

இதனால... ஒவ்வொரு நாளும் என் பள்ளி பிருந்தாவனம்!

குழந்தைகள் - பெற்றோர்; இன்றைய சூழலில் யார் மாறணும்?

'குழந்தைங்க தப்பு பண்ணிதான் எல்லாத்தையும் கத்துப்பாங்க; அதனால, அதிகமா கண்டிக்காதீங்க'ன்னு சொன்னா, பொய்களை கண்டுக்காம இருக்கிறது, 'தவறுகளை உடனுக்குடன் திருத்துங்க'ன்னு சொன்னா, அடிச்சு பயம் காட்டுறதுன்னு சில அம்மாக்கள் செயல்படுறாங்க; அவங்க மாறணும்!

குழந்தை மனசு

எவ்வளவு கோபப்பட்டாலும் கொஞ்சநேரத்துலயே 'ப்ரெண்ட்ஸ்'னு கை நீட்டுற அந்த மனசு, குழந்தைக்கு கடவுள் தந்திருக்கிற பெரும் பரிசு; இப்படியான 70 குழந்தைகள் கூட அற்புதமா நகர்ந்திட்டு இருக்கு என் அன்றாடம்.

பெற்றோர்க்கு செல்லமா ஒரு குட்டு!
ராதிகா: 'லேசா உடம்பு முடியலையா; அலுவலகத்துக்கு விடுப்பு!' - உங்களோட இந்த வழக்கத்தை உங்க குழந்தை பழகிட்டு இருக்குதுன்னு உணர்ந்திருக்கீங்களா?வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement