தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
ஆரல்வாய்மொழி வனச்சரக அலுவலக உதவியாளரா இருந்த என் அப்பாவையும், அம்மாவையும் 10.11.2011 இரவு 8:15 மணிக்கு, சுசீந்திரம் - தேரூர் சாலையில யாரோ சுட்டுக் கொன்னுட்டாங்க; சுசீந்திரம் காவல் நிலையத்துல வழக்கு பதிவாச்சு!
மரக்கடத்தல் கும்பல்தான் காரணம்; நகைக்காக நடந்த கொலை; 100வது நாள்ல அம்மாவோட சித்தப்பா மகனை கைது பண்ணி, 'சொத்துக்காக நடந்த கொலை'ன்னு ஏதேதோ சொன்னாங்க! விசாரணைக்காக என் பெற்றோர் செல்போன்களை வாங்கின போலீஸ், 'செல்போன்களை வாங்கவே இல்லை'ன்னு சாதிச்சிட்டாங்க! சி.பி.ஐ., விசாரணை கேட்டு நாங்க நீதிமன்றம் போனதால, 5.12.2017 அன்னைக்கு சி.பி.சி.ஐ.டி., வசம் வழக்கு போச்சு!
மறுபடியும் முதல்ல இருந்து விசாரணை; ஆனா, குற்றப்பத்திரிகை கூட இன்னும் தாக்கல் பண்ணலை! இதுதொடர்பா, 12.7.2022ல் கொடுத்த 'முதல்வரின் முகவரி' மனு எண்:4050039க்கும் மதிப்பில்லை!
அமைச்சர் கே.என்.நேருவோட சகோதரர் கொலை வழக்கிற்கு கொடுக்குற முக்கியத்துவத்தை, என் அப்பா - அம்மா கொலை வழக்கிற்கு ஏன் தர மாட்டேங்குறீங்க?
- வனத்துறை ஊழியர் ஆறுமுகம்,யோகீஸ்வரி கொலை வழக்கில் நீதி கேட்கும் மகள் அனுஷா, மகன் முத்துக்குமார், தேரூர், அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!