'என் செய்தி வெளியான அன்னைக்கே மாவட்ட சமூக நலத்துறையில இருந்து அழைப்பு; 'வங்கி கணக்கு புத்தகத்தோட நாளைக்கு காலையில கலெக்டர் ஆபிஸ் வந்துடுங்க'ன்னு அரசு தரப்புல சொன்னாங்க!
'சொன்ன நேரத்துக்குப் போனேன்; கொஞ்ச நேரத்துலேயே, 'வங்கி கணக்குல பணம் ஏறிடுச்சும்மா'ன்னு தித்திப்பான செய்தி கிடைச்சது! ஏழு ஆண்டுகளா அலைஞ்சும் கிடைக்காத, 'முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட உரிமைத்தொகை' வெறும் 24 மணி நேரத்துல கிடைச்சிருச்சு; 30 ஆயிரத்து 39 ரூபாய் வரவாயிருந்தது!
'மனுக்கள் காகிதம் அல்ல... ஒரு மனிதனின் வாழ்க்கை; மக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வையுங்கள்'னு, அரசு இயந்திரத்தை முடுக்கி விடுற தமிழக முதல்வரோட பார்வைக்கு என் துயரத்தை கொண்டு போய், என் குறை தீர்த்த 'தினமலர் - கண்ணம்மா'வுக்கு கடமைப்பட்டிருக்கேன்!
'எளியவர்களின் துயர் தீர்க்க 'தினமலர்' தேடி வரும்'னு எல்லாரும் சொல்ல கேட்டிருக்கேன்; இப்போ நானே உணர்றேன். எங்க வாழ்க்கையில விடியல் தந்த தமிழக முதல்வருக்கு பெரும் நன்றி!'
- 12.3.2023 'ரவுத்திர வீணை' பகுதியில், 'முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட உரிமைத்தொகை' இழுத்தடிப்பு பற்றி மனக்குமுறலை கொட்டிய த.பாண்டீஸ்வரி, விருதுநகர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!