கர்நாடகா ரக பலா பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம்படித்த முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறிய தாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்க ளில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.
அந்த வரிசையில், 'சித்து' என, அழைக்கப்படும் கர்நாடகா ரக பலா பழ மரம் சாகுபடி செய்யலாம். இதில் விளையும் பலா மூன்று ஆண்டுகளில், மகசூல் கொடுக்கும் தன்மை உடையது. இதன் பழம், இளஞ்சிவப்பு நிறத்தில், சதைப் பற்று அதிகமாக இருக்கும்.
குறிப்பாக, தண்ணீர் தேங்காத மேட்டு நிலங்களில், இந்த ரக பலா மரத்தை சாகுபடி செய்யலாம். பலா பழத்தை பொருத்தவரையில், மஞ்சள் நிறத்தில் இருந்து, இளஞ்சிவப்பு நிறத்தில் மாறுபட்டு இருப்பதால், கூடுதல் வருவாய்க்கு வழி வகுக்கும்.
வர்த்தக ரீதியாக சாகுபடி செய்ய நினைக்கும் விவசாயிகளுக்கு, சித்து ரக பலா பழம் ஏற்ற ரகம் என, கூறலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்
98419 86400
வாசகர் கருத்து (4)
நிறத்தை விடுங்கள். சுவை மஞ்சள் பலா அளவுக்கு இருக்குமா?
சுவை குறைவுதான்
சாப்பிடுவதால் அதன் பலன் எப்படி?
இன்று கர்நாடகப் பலா, 2026ல் கர்நாடகத் தாமரை.