Load Image
Advertisement

ஆரோக்கியம் தரும் செயற்கை பற்கள்!

நீண்ட நாட்கள் பற்கள் இல்லாமல் இருந்தால், மற்ற பற்கள் இடம் மாறி, அதன் செயல்பாடு குறையும். மற்ற பற்களின் இட மாற்றத்தால் இழந்த பற்களை பொருத்துவது சிரமமாகி விடும். பற்கள் நீண்ட காலம் இல்லாவிட்டால், தாடை எலும்பில் பிரச்னை ஏற்படலாம்.

எல்லா பற்களையும் இழந்தவர்களுக்கு, தாடை எலும்பின் துணையுடன் நிரந்தரமாக செயற்கை பற்கள் பொருத்தலாம். இதற்கு 'இம்ப்ளாண்ட்' என்று பெயர். இச்சிகிச்சை பெற்றவர்கள், கழற்றி பொருத்தும், 'பல் செட்'டை பயன்படுத்துபவர்களை விட, ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

தாடை எலும்பின் துணையுடன் இம்ப்ளாண்ட் வைப்பதால், எலும்பின் திடம் நன்றாக இருக்க வேண்டும். எனவே, விட்டமின் டி, கே, கால்சியம் சத்துக்களின் அளவை பரிசோதித்து, சரியான அளவில் இருப்பதை உறுதி செய்த பின் இம்ப்ளாண்ட் சிகிச்சை செயவது அவசியம்.

சர்க்கரை கோளாறு, இதய நோயாளிகள், உடல் சார்ந்த பிரச்னை ஏதேனும் இருந்தால், அதை கட்டுப்பாட்டில் வைத்த பின் இச்சிகிச்சையை செய்யலாம். இம்ப்ளாண்ட் பொருத்திய மூன்று - ஆறு மாதத்திற்குள் நிரந்தர செயற்கை பற்களை பொருத்தலாம்.

இது தவிர, இம்ப்ளாண்ட் பொருத்தும் போதே, நிரந்தர செயற்கை பற்கள் பெறும் வசதியும் உண்டு.
பேராசிரியை அன்னபூரணி ஹரிஹரன்
மீனாட்சி பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
சென்னை.



வாசகர் கருத்து (1)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நன்றாக மென்று சாப்பிட்டால்த்தான் உடலுக்குத்தேவையான சத்துக்கள் கிடைக்கும். ஆகவே நீண்ட நாள் வாழ பல் அவசியம். அதைவிட பராமரிப்பது அவசியம். ஒழுங்காக பராமரிக்கவில்லை என்றால் என்னைபோல பல்லுக்கு பன்னிரண்டாயிரம் வெள்ளி என்று அழ வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement