பச்சிளம் குழந்தைகள், குறிப்பாக பிறந்தது முதல் ஓராண்டிற்குள் இருக்கும் குழந்தைகளில், சில சமயங்களில் குழந்தைகள் அழாமல் இருக்கும் போதும் கண்ணீர் வடியும்.
இதற்கு காரணம், கண்களின் புறப்பகுதியில் உள்ள, 'லேக்ரிமல்' சுரப்பியாகும். இதில் உருவாகும் நீர், நுண்ணிய குழாய் வழியே மூக்கிற்குள் வடிந்து விடும்.
பல குழந்தைகளுக்கு இந்த சுரப்பியின் அடியில் உள்ள குழாய் மூடியே இருப்பதால், மூக்கிற்குள் வழிய முடியாத நீர், கண்களிலேயே கட்டிக் கொள்ளும்; இது இயல்பான ஒன்று தான்.
சில குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் வரையும், சிலருக்கு ஒன்பது மாதங்கள் வரையும், அவ்வளவு ஏன்... இன்னும் சில குழந்தைகளுக்கு ஓராண்டு வரை கூட இந்த குழாய் திறக்காது.
கண்கள் சிவப்பது, பிசுபிசுப்பு என்று வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் இருந்தால் மட்டும், உடனடியாக டாக்டரின் ஆலோசனையை பெற வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில், வெறும் நீர் சேர்ந்து இருந்தால், கீழ் பகுதியில் மூக்கிற்கும், கண்களுக்கும் நடுவே, ஒரு நாளைக்கு பல முறை மென்மையாக மசாஜ் செய்தால் போதும்.
தானாகவே மெல்லிய குழாய் திறந்து, நீர் மூக்கிற்குள் சென்று விடும். எனவே, இது பயப்படும்படியான பிரச்னை இல்லை.
டாக்டர் சையத் முஜாஹித் ஹூசேன்
குழந்தைகள் நல மருத்துவர், பெங்களூரு.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!