'டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ்' நிறுவனம், அதன், 'இனோவா கிரிஸ்டா' எம்.பி.வி., காரை புதுப்பித்து, சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த காரில் மிகப்பெறும் மாற்றம் என்னவென்றால், இந்த முறை டீசல் வகையில் மட்டுமே இனோவா கிரிஸ்டா கார் களமிறக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், 'இனோவா ஹைகிராஸ்' கார், பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் வகைகளில் வரும் பட்சத்தில், இரண்டு கார்களையும் ஒரே நேரத்தில், முதல் முறையாக டொயோட்டா சந்தைப்படுத்தியுள்ளது, வாகனப் பிரியர்களை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்துள்ளது.
இந்த கார், ஜி, ஜி.எக்ஸ்., வி.எக்ஸ்., மற்றும் இசட்.எக்ஸ்., என 4 வகைகளில் வருகிறது. மேலும், கிளைமேட் கன்ட்ரோல், சொகுசு லெதர் சீட்டுகள், 8 அங்குல இன்போடெயின்மென்ட் அமைப்பு, 7 காற்றுப் பைகள் என பல அம்சங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த காரின் விலை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், 50,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபரக் குறிப்பு:
இன்ஜின் - 2.4 லிட்டர் டீசல்
ஹார்ஸ் பவர் - 149 பி.எஸ்.,
டார்க் - 360 என்.எம்.,
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!