'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனம், அதன் புதிய 'சூம்' ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்கூட்டர், எல்.எக்ஸ்., வி.எக்ஸ்., மற்றும் இசட்.எக்ஸ்., என மூன்று வகைகளில் வெளியாகின்றன. இசட். எக்ஸ்., வகை ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள கார்னரிங் லைட்டுகள் மட்டும், வளையும் பொழுது தானாக ஒளிரும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல, ஹீரோவின் பிரத்யேக எக்ஸ்.டெக் ப்ளூடூத் தொழிற்நுட்பமும் இந்த வகை ஸ்கூட்டரில் மட்டுமே வருகிறது.
சூம் ஸ்கூட்டரின் சிறப்பம்சமே, ஹீரோ நிறுவனத்தின் விசேஷ ஸ்டார்ட், ஸ்டாப் தொழிற்நுட்பம் தான்.
அதாவது, வாகனம் ஐந்து வினாடிகளுக்கு மேல் நின்றால், ஸ்கூட்டர் தானாக செயல் இழந்து விடுவது மட்டுமின்றி, கிளட்சை அழுத்தும் போது, தானாக இன்ஜின் இயங்கும் அளவிற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.
'பிரண்ட் டிஸ்க் பிரேக், டைமண்ட் கட் அலாய், யு.எஸ்.பி., சார்ஜிங்' என பல அத்தியாவசிய அம்சங்களும் இந்த வாகனத்தில் இடம்பெற்று உள்ளன.
இந்த ஸ்கூட்டரின் விலை, அதன் வகையைப் பொறுத்து 68 ஆயிரத்து 599 ரூபாய் முதல் 76 ஆயிரத்து 699 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விபரக் குறிப்பு:
இன்ஜின் - 110.9 சி.சி.,
ஹார்ஸ் பவர் - 8.5 பி.எஸ்.,
டார்க் - 8.7 என்.எம்.,
எடை - 109 கி.கி.,
பியூயஸ் டாங்க் - 5.2 லிட்டர்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!