'வேவ் மொபிலிட்டி' என்ற ஸ்டார்ட் ஆப் நிறுவனம், இந்தியாவின் முதல் சோலார் ஆற்றல் கொண்ட, மின்சார காரான 'ஈவா' என்ற முன்மாதிரி காரை வடிவமைத்துள்ளது. இந்த காரில் இரு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை மட்டுமே பயணிக்க முடியும்.
இந்த காரின் பாகங்கள் அனைத்தும் வலுவான, மிகக் குறைந்த எடை கொண்ட பொருள் மற்றும் எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் வைத்து வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இது காரின் எடையை குறைப்பது மட்டுமின்றி, செயல் திறனையும் அதிகரிக்கிறது.
காரின் மேல் புறத்தில், 'சோலார் பேனல்' பொருத்தப்பட்டுள்ள நிலையில், சூரிய சக்தியின் வாயிலாக பேட்டரியை 'சார்ஜ்' செய்து கொள்ள முடிகிறது. அத்துடன், 15 'ஆம்பியர் சார்ஜிங் சாக்கெட்' வாயிலாகவும், பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
மேலும், பின் பக்க கேமரா, 'டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட்' அமைப்பு மற்றும் அவசர பிரேக்கிங் வசதி உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் இருக்கின்றன.
இந்த ஆண்டு முடிவிற்குள், இந்த காரின் தயாரிப்பு ஆரம்பமாகும், என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
விபரக் குறிப்பு:
பேட்டரி - 14 கி.வாட்.,
ரேஞ்ச் - 250 கி.மீ.,
(0-40 கி.மீ.,) பிக்., அப் - 5 விநாடிகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!