'ஜாகுவார்' நிறுவனம், அதன் 'ஐ - பேஸ்' மின்சார எஸ்.யு.வி., காரை புதுமைப்படுத்தி, சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார், இரு மெட்டாலிக் நிறங்களிலும், 3 புதிய ஆர் - டைனமிக் வகைகளிலும் வெளியாகிறது.
கறுப்பு மற்றும் வெள்ளி நிறங்களில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஜாகுவாரின் புதிய லோகோ, 'அட்லஸ் கிரே' நிறத்தில் வரும் முன்பக்க 'கிரில்' ஆகியவை, காரின் முன் அழகை எளிமையாகவும், கம்பீரமாகவும் காட்சிப்படுத்துகிறது.
அதே காரின் உட்புறத்தில், 'பி.வி., புரோ இன்போடெயின்மென்ட்' அமைப்பு, ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. வீட்டில் சார்ஜ் செய்வதற்கான, 3 பேஸ் 11 கி.வாட் வால் மவுன்ட் சார்ஜிங் அல்லது சிங்கிள் பேஸ் 7 கி.வாட் வால் மவுன்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
இந்த காரின் விலை குறித்து இன்னும் எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.
விபரக் குறிப்புபேட்டரி 90 கி.வாட் லித்தியம் அயான்ரேஞ்ச் 470 கி.மீ.,ஹார்ஸ் பவர் 400 பி.எஸ்.,டார்க் 696 என்.எம்.,1 - 100 கி.மீ., பிக்_அப் 4.8 வினாடிகள்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!