'பென்ட்லி' சொகுசு கார் நிறுவனம், உலக சந்தையில் இயங்கி வரும் 'பென்டேகா' காரை உருமாற்றி, 'பென்டேகா எக்ஸ்டென்டட் வீல் பேஸ்' என்ற புதிய எஸ்.யு.வி., காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார், 'அசூர், முதல் எடிஷன்' என்ற இரு வகைகளில் வெளியாகிறது.
இந்த காரின் வீல் பேஸ், 180 மி.மீ., அதிகரிக்கப்பட்டுள்ளதால், பின்னால் அமருபவர்களுக்கு தாராளமான, சவுகரியமான உட்புற இடம் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் வசதியைப் பொறுத்து, 4 சீட், 5 சீட் அல்லது 4 பிளஸ் 1 சீட் ஆகிய வகைகளிலும் இந்த காரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என்னதான் வீல் பேஸ் பெரிதாக இருந்தாலும், 7 சீட் வகை கார் இந்தியாவில் களமிறக்கப்படவில்லை.
பயணிகளின் உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு, காரின் உட்புற வெப்பநிலையை மாற்றி அமைக்கும் தொழில்நுட்பம், 40 டிகிரி சாயும் சீட்டுகள் என பல சொகுசான அம்சங்களை கொண்ட காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் விலை, 6 கோடி ரூபாயாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விபரக் குறிப்புஇன்ஜின் 4 லிட்டர், வி _8ஹார்ஸ் பவர் 555 பி.எஸ்.,டார்க் 770.10 என்.எம்.,டாப் ஸ்பீடு 290 கி.மீ.,1 - 100 கி.மீ., பிக்_அப் 4.6 வினாடிகள்
விபரக் குறிப்புஇன்ஜின் 4 லிட்டர், வி _8ஹார்ஸ் பவர் 555 பி.எஸ்.,டார்க் 770.10 என்.எம்.,டாப் ஸ்பீடு 290 கி.மீ.,1 - 100 கி.மீ., பிக்_அப் 4.6 வினாடிகள்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!