'ஹாப்' எலக்ட்ரிக் நிறுவனம், அதன் புதிய 'லியோ' மின்சார ஸ்கூட்டரை, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்கூட்டர், 5 நிறங்களில் வெளியாகிறது.
இதில் 'எக்கோ, பவர், ஸ்போர்ட், ரிவர்ஸ்' ஆகிய மோடுகள் இருக்கின்றன. அத்துடன், 'பி.எல்.டி.சி., ஹப் மோட்டார், எப்.ஒ.சி., வெக்டார் கன்ட்ரோலர்' ஆகியவை பயன்படுத்தப்படுவதால், ஸ்கூட்டரை எளிதாக கையாளவும், மென்மையான பயணத்தை பெறவும் முடிகிறது.
கூடுதலாக, 12 டிகிரி ஏற்றத்திலும் மிக வலிமையான சக்தியுடன் முன்னேறும் திறனையும் பெற்றுள்ளது.
இரு டிஸ்க் பிரேக்குகளுடன் கூடிய 'ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்' தொழில்நுட்பம், 10 அங்குல அலாய் சக்கரங்கள், எல்.சி.டி., டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் ஜி.பி.எஸ்., டிராக்கர் ஆகிய அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்கூட்டரின் விலை, 1 லட்சம் ரூபாய்க்குள் நிர்ணயிக்கப்படும் என்று 'ஹாப்' நிறுவனம் தெரிவித்து உள்ளது.
விபரக் குறிப்புபேட்டரி 2.1 கி.வாட்ஹார்ஸ் பவர் 3 பி.எஸ்.,டார்க் 90 என்.எம்.,எடை 160 கி.கி.,ரேஞ்ச் 120 கி.மீ.,
விபரக் குறிப்புபேட்டரி 2.1 கி.வாட்ஹார்ஸ் பவர் 3 பி.எஸ்.,டார்க் 90 என்.எம்.,எடை 160 கி.கி.,ரேஞ்ச் 120 கி.மீ.,
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!