'சிட்ரன்' கார் நிறுவனம், முதல் முறையாக, அதன் புதிய 'இ.சி. 3' என்ற மின்சார எஸ்.யு.வி., காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார், 'லைவ், பீல்' என்ற இரு வகைகளில் வருகின்றன.
'சிட்ரன் சி 3' எஸ்.யு.வி., காரில் இருப்பதைப் போன்ற அதே அம்சங்கள் தான், இந்த மின்சார காரிலும் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 10.2 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ அமைப்பு உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பை பொறுத்த வரையில், ஏ.பி.எஸ்.,உடன் கூடிய இ.பி.டி., வசதி, 2 காற்றுப் பைகள் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் விலை, அதன் வகையைப் பொறுத்து 10 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இதன் முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது.
விபரக் குறிப்புபேட்டரி 29.2 கி.வாட்ரேஞ்ச் 320 கி.மீ.,ஹார்ஸ் பவர் 57 பி.எஸ்.,டார்க் 143 என்.எம்.,டாப் ஸ்பீடு 107 கி.மீ.,1 - 60 கி.மீ., பிக்_அப் 6.8 வினாடிகள்
விபரக் குறிப்புபேட்டரி 29.2 கி.வாட்ரேஞ்ச் 320 கி.மீ.,ஹார்ஸ் பவர் 57 பி.எஸ்.,டார்க் 143 என்.எம்.,டாப் ஸ்பீடு 107 கி.மீ.,1 - 60 கி.மீ., பிக்_அப் 6.8 வினாடிகள்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!