Load Image
Advertisement

இளஸ்... மனஸ்... (182)

அன்புமிக்க பிளாரன்ஸ் ஆன்டி...

நான், 13 வயது சிறுவன்; தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறேன். பாடுவது, படம் வரைவது, நடிப்பது மற்றும் மிமிக்ரி செய்வது போன்ற திறமைகள் என்னிடம் உள்ளன. நான், பிரபலமாக விரும்புகிறேன். இதற்கு எளிய வழிகள் இருந்தால், சொல்லுங்கள்.

இப்படிக்கு,
பா.கிருஷ்ண மோகன்.

அன்பு மகனுக்கு...

உலக மக்கள் தொகையில், 0.0086 சதவீத பேர் தான், பிரபலமாக சாத்தியம் இருக்கிறது.

ஒரு மனிதன் பிரபலமாவது, லாட்டரியில், 10 லட்சம் அமெரிக்க டாலர், அதாவது, 8.25 கோடி ரூபாய் பரிசு வெல்வதற்கு சமம்.

பலரால் விரும்பப்படும் நிலை, பொது மதிப்பு, நற்பெயரே பிரபலம் எனப்படும். பலர், 30 வயதுக்குள் பிரபலமாகின்றனர். ஒவ்வொரு மனிதரும், 15 நொடி பிரபலமாய் இருக்க வாய்ப்பிருக்கிறது.

உலகில் இருவகையில் பிரபலமாக வாய்ப்பு உள்ளது.

* நேர்மறை பிரபலம் - தனித்தன்மையான திறமையும், தொடர்ந்த கடின உழைப்பும், சிறிதளவு அதிர்ஷ்டமும் இருந்தால், நேர்மறையாக பிரபலமடையலாம்

* எதிர்மறை பிரபலம் - பணத்தால், அதிகாரத்தால், வன்முறையால், ஜாதி, மத உணர்வுகளை துாண்டுவதால், எதிர்மறை பிரபலம் ஆகலாம்.

பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு மத தீவிரவாதத்தால், எதிர்மறையாக பிரபலம் கிடைத்தது.

பள்ளி அளவில், மூன்று விதமாக பிரபலமாகலாம்...

* முதல் மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களுக்கு கீழ்படிந்து பிரபலமடைவது

* அடிதடி, முரட்டுத்தனம், ஒழுங்கீனமாக வாழ்ந்து, எதிர்மறையாக பிரபலமடைவது

* நன்கு படித்து, தீயவற்றை தட்டி கேட்பதால் பிரபலம் அடையலாம்

* உள்ளூர் அளவில், மாநில அளவில், சர்வதேச அளவில் திறமையை வளர்த்து, வெளிப்படுத்தி பிரபலமடையலாம்.

பிரபலமாக, கீழ்க்கண்ட விதங்களில் நீ முயற்சி செய்...

* உண்மையில், உன் திறமை தனித்துவமானதா என்று நடுநிலையாய் சிந்தித்து செயல்படு

* கூட்டத்தில், கூட்டமாக கலந்து விடாதே; தனித்து நில்!

* திறமையை, பயிற்சி மூலம் மெருகேற்று!

* பாரம்பரிய வழிகளை தவிர்த்து, புது பாதையை உருவாக்கு!

* தோல்விகளுக்கும், காயங்களுக்கும் சிறிதும் பயப்படாதே!

* எதிர்மறை விமர்சனங்களை எதிர் கொள்!

* பிரபலமாகும் முயற்சியில் படிப்பை கை விட்டு விடாதே!

* ஏற்கெனவே பிரபலமடைந்த முன்மாதிரியை பின்பற்று!

* ஏற்றி விடும் ஏணியை கரை சேர்க்கும் தோணியை கரம் பற்று!

* வாய்ப்புகளை தேடு அல்லது உருவாக்கு.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்று கூறுகிறேன்...

'புகழ் நீராவி ஆகி விடும்; பிரபலம் ஒரு விபத்து; பணம் பறந்து விடும். உலகின், ஒரே நிரந்தரம், நன்னடத்தை தான். இதை மறந்து விடாதே...

பிரபலமாகும் உன்னிடம், 'ஆட்டோ கிராப்' வாங்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement