தினசரி செய்யும் உடற்பயிற்சிகளோடு சேர்த்து, யோகாசனமும் செய்வதால், இதய ஆரோக்கியம் மேம்படும். 50 வயதிற்கு உட்பட்ட, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சர்க்கரை கோளாறு உள்ளவர்களை தேர்வு செய்து, அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, முதல் குழுவினருக்கு வழக்கமாக செய்யும் 30 நிமிட உடற்பயிற்சியுடன் கூடுதலாக 15 நிமிடங்கள் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
இன்னொரு குழுவினர் வெறும் உடற்பயிற்சி மட்டுமே வாரம் ஐந்து நாள் செய்தனர்.
மூன்று மாதங்கள் தொடர்ந்து இவர்களை கண்காணித்ததில், யோகாசனமும் சேர்த்து பயிற்சி செய்தவர்களின் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, ரத்த சர்க்கரை அளவு, மற்றவர்களை காட்டிலும் சீரான வகையில் கட்டுப்பாட்டில் இருந்தது.
உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது திட உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து, காலை அல்லது மாலை உடற்பயிற்சி செய்யலாம்.
சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை மாற்றி, போதுமான தயாரிப்பு இல்லாமல், புதிய வகையான உடற்பயிற்சிகளை செய்யும் போது, எலும்பு, தசைகளை அதிகம் பாதிக்கும்.
இதய நோயிலிருந்து குணமானவர்கள், எந்த முன்னேற்பாடும் இல்லாமல், புதிய, கடின மான பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, இதயத்தை பாதிக்கலாம். இதய கோளாறு இருப்பவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள், பாதிப்பில் இருந்து மீண்ட பின், தங்களின் மருத்துவரின் ஆலோசனைப்படி, உடற்பயிற்சி செய்வதே பாதுகாப்பானது.
அந்தந்த வயதிற்கு ஏற்ற, பொதுவான சில உடற்பயிற்சிகளை அனைவரும் செய்யலாம். ஆனாலும் வயது, உடல் எடை, தேவைகளுக்கு ஏற்ப பயிற்சிகளை செய்தால் கூடுதல் பலனை தரும்.
எவ்வளவு நேரம் நடைபயிற்சி அவசியம்?
நடக்கும்போது கைகளை நன்றாக வீசி நடப்பது, தோள், கைகள், 'ரிலாக்சாக' உதவும் என, இதுவரையில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்திலும் உறுதியாகி உள்ளது.
- கேனடியன் ஜர்னல் ஆப் கார்டியாலஜி இதழ்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!