* 'தமிழகம் அமைதிப்பூங்கா'ன்னு கவர்னர் தன் உரையில சொல்லாம தவிர்த்தப்போ எனக்கு பெரிய வருத்தம் இல்லை; ஆனா, காஞ்சிபுரம் மாணவியை ஐந்து பேர் பாலியல் வன்கொடுமை செய்த செய்தி படிச்சதும், கவர்னர் செய்தது 'வரலாற்றுப் பிழை'ன்னு புரிஞ்சது! ஏலேய் உடன்பிறந்தவனே... நான் சரியா பேசுறேனா?
* கர்நாடகாவில் மெட்ரோ ரயில் துாண் சரிந்த விபத்தில், 'நிவாரணம் வேண்டாம்; நான் ஒரு கோடி ரூபாய் தருகிறேன்... என் மகள், பேரனின் உயிரை திருப்பித் தாருங்கள்'னு முதல்வர்கிட்டே பெண்ணோட அப்பா வெடிக்கிறார்; அரசு அலட்சியத்தால அசம்பாவிதம்னா, 'குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை' கேட்கிற வழக்கம் அங்கே கிடையாது போல!
* 1.'ஆக... பெண் காவலர் புகார் அடிப்படையில் தி.மு.க.,வினர் மீது 72 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளோம்!' - சரி... பாதிக்கப்பட்ட அந்த பெண் மனதிற்கு என்ன சிகிச்சை? 2. '2021 முதல் 2022 வரை தரமற்ற உணவுகள் தொடர்பாக 6.17 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளோம்!' - சரி... அத்தரமற்ற உணவருந்திய மக்களுக்கு என்ன சிகிச்சை?
* 'சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் அடித்து துன்புறுத்தப்பட்டு மரணம்; காரணமான காவலர்கள் கைது!' - அ.தி.மு.க., ஆட்சி! 'செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் துன்புறுத்தப்பட்டு மரணம்; காரணமான காவலர்கள் கைது!' - தி.மு.க., ஆட்சி! இதுல எது இருள்... எது விடியல்?
ஜெய்ஹிந்த்!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!