Load Image
Advertisement

அன்புள்ள சிஸ்டர்

பெரும்பாலும் நர்சிங் முடித்தவர்களின் தேர்வு செவிலியர் பணி; ஆனால், இளங்கலை முடித்த கையோடு விரிவுரையாளராகி பின் முதுகலை பட்டம் பெற்று கல்லுாரி முதல்வராகவும் உயர்ந்திருக்கிறார் தர்மபுரி ப.நீலா.
பணி துவக்கம்: 1995ம் ஆண்டுமுதல் களம்: தனியார் நர்சிங் கல்லுாரி, சேலம்பதவி: விரிவுரையாளர்துறை அனுபவம்: 27 ஆண்டுகள்
விதைகளை உருவாக்குபவள்

கற்பிக்கிறதை விட கத்துக்கிறதுல எனக்கு கூடுதல் ஆர்வம். சமீபத்துல என் 49 வயசுல முனைவர் பட்டம் வாங்கினேன். பட்டம், பட்டயம், சான்றிதழ் படிப்புகள்ல 12 முடிச்சிருக்கேன்; இதுல, பல படிப்புகளுக்கும் நர்சிங் துறைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இப்படி தேடித்தேடி நான் கத்துக்க காரணம், என்னால உருவாக்கப்படுற செவிலியர்கள், துறை சார்ந்த பாடங்களால் மட்டுமே உருவாக்கப்பட்டவர்களா இருக்கக்கூடாதுங்கிற எண்ணம்தான்!

காதல் எனும் பொறுப்பு

நான் பிறப்பால் ஹிந்து; என் கணவர் ஷேக் காதர் - நான் கல்லுாரி விரிவுரையாளர்; அவர் பேருந்து ஓட்டுனர் - பிளஸ் 2 தேர்வுல மாநில அளவில் எனக்கு மூன்றாவது இடம்; அவர் 10ம் வகுப்பு மட்டுமே படிச்சிருக்கார்! எதிர்ப்புகளை கடந்து நாங்க காதல் திருமணம் பண்ணிக்கிட்டோம். எங்க கனவுகள் மேல எங்க காதலுக்கு பொறுப்பு இருந்தது. 'நோக்கத்துல திசை மாறாம இருக்கிற காதல்தான் பொறுப்பான காதல்'ங்கிறது எங்க ரெண்டு பேரோட நம்பிக்கை!

ஹிந்துவாக இருந்தபடி முஸ்லிம் குடும்பத்தில் இல்லறம் நடத்துகிறார் நீலா. அல்லாஹ், மாரியம்மனை நினைத்த பிறகே பேருந்து இயக்குகிறார் ஷேக் காதர். இவர்களின் மகள் யாஸ்மின் காதலித்து கரம் பிடித்திருப்பவர் பெயர் ஆனந்த்; ஹிந்து!

சிந்தனை புள்ளி

பொதுவா நர்சிங் துறையில முனைவர் பட்ட ஆய்வுகள், 'நர்சிங்' தொடர்பா இருக்கும். ஆனா, என்னோட ஆய்வுகள் பிற துறைகளை நர்சிங்கிற்குள் கொண்டு வர்றதா இருக்கும். 'டயாலிசிஸ்' பேஷன்டுக்கு வழக்கமான பராமரிப்பு கடந்த சேவைகள், பிரத்யேக உணவு வகைகள் தொடர்பா ஆய்வு கட்டுரை தயார் பண்ணினேன். என் முயற்சிக்கு பாராட்டு கிடைச்சது! செவிலியரா இல்லாம நோயாளியோட இடத்துல இருந்து சிந்திச்சதால இது சாத்தியமாச்சு!

என் சாவி

மூன்று அறுவை சிகிச்சைகள் எனக்கு நடந்திருக்கு. அதனால, இவ்வளவு படிப்புகளையும் நான் சுலபமா படிச்சிட்டேன்னு சொல்லிட முடியாது. நிறைய சிரமப்பட்டிருக்கேன். எனக்கான விஷயங்களை மத்தவங்ககிட்டே விவாதிக்காததும், மத்தவங்க விஷயங்களை தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டாததும்தான் நான் தெளிவோட தீர்க்கமா இயங்க காரணம்.

சுருக்:

நர்சிங் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் செவிலியர்களைப் போல் வணக்கத்திற்கு உரியவர்கள்தான்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement