தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...
'மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் சலுகை அல்ல... கடமை; ஒரு மாற்றுத்திறனாளி கூட மன வருத்தம் அடைந்து விடாத வகையில் எங்கள் பணி இருக்கும்; மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை பார்த்து உள்ளம் பூரிக்கிறேன்!' - உங்களோட இந்த வார்த்தைகளை எல்லாம் நம்பி இதை நான் கேட்குறேன்!
என் மகளோட வலதுகால் பாதம் பிறவியிலேயே வளைஞ்சிருந்தது; எங்க உதவியோட 8ம் வகுப்பை சிரமப்பட்டு முடிச்சவளுக்கு இன்னொரு காலும் பாதிச்சிருச்சு; 2010ம் ஆண்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போனோம்; மருந்து மாத்திரையோட அனுப்பிட்டாங்க! மார்ச் மாதம் எங்க கிராமத்துல தனியார் மருத்துவமனை நடத்தின மருத்துவ முகாம்ல அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை பண்ணினாங்க!
ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில, 2017 ஜூலை 2ம் தேதியில இருந்து 18ம் தேதி வரைக்கும் சிகிச்சை நடந்தது. அப்போ இருந்து அவளோட வாழ்க்கை மூணு சக்கர நாற்காலியிலதான்! இப்போது மூன்று ஆண்டுகளா கொஞ்சம் கூட அசைய முடியாம ரொம்ப சிரமப்படுறா! கீழ்மூட்டு சிதைவு மற்றும் அறிவுசார் குறைபாடுக்கு சிகிச்சையே கிடையாதா... இல்ல எங்களுக்கு கிடைக்கலையா?
- 80 சதவீத மாற்றுத்திறனாளியான 25 வயது மகள் கனிமொழிக்கு உரிய சிகிச்சை கேட்கும் தாய் சின்னப்பொண்ணு, சிறுநல்லுார், மதுராந்தகம், செங்கல்பட்டு.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!