ராமநாதபுரம், கடலாடியைச் சேர்ந்த விமலாதேவிக்கு 16 வயதில் திருமணம்; 8 மகள்கள், 2 மகன்கள்.
பிள்ளை வளர்ப்புலேயே வாழ்க்கை கழிஞ்சிருக்குமே பாட்டி...
தினசரி சமையல் பயன்பாட்டை வைச்சு, கேஸ் தீர்ந்து போற நாளை சரியா கணிச்சு என்னால சொல்ல முடியுது; மின் கட்டணம் செலுத்த வேண்டிய நாள் மறக்காம இருக்கு; சோம்பேறித்தனமா சோபாவுல சாய்ஞ்சு 'டிவி'யில செய்தி பார்க்கிறதைவிட, நாளிதழ் வாசிச்சு விளக்கமா செய்திகளை புரிஞ்சுக்கிற ஆர்வம் இருக்கு!
என் கணவர் காங்கிரஸ் கட்சியில இருந்ததால இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி பேச்சை நெருக்கமா இருந்து கேட்ட பெருமை இருக்கு. எனக்கு பிடிச்ச நடிகர் ஜெமினி கணேசனை சென்னை நுங்கம்பாக்கத்துல பார்த்த பரவசம் மனசுல பசுமையா இருக்கு!
திருப்பதி, காஞ்சிபுரம் ஆன்மிக பயணங்கள் தந்த நல்அனுபவம் இருக்கு. என் அம்மா சொல்லிக் கொடுத்த கைவைத்தியங்களை என் பேத்திகளுக்கு கற்றுக்கொடுத்த திருப்தி இருக்கு! என் வயசு, தோற்றம், வாழ்க்கை சூழலை வைச்சு, 'இவ வாழ்க்கை வெறுமையானது'ன்னு நீங்க முடிவு பண்ணினா நான் பொறுப்பில்லை!
சமீபத்தில் 20 பேரன்கள், 15 பேத்திகள் மற்றும் கொள்ளுப் பேத்தி சூழ, 80 வகை உணவுகளுடன் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் பாட்டி.
பாட்டி சொல்லை தட்டாதே!*தினமும் ஒருவேளையாவது குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுங்க!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!