மலையாள சினிமாவில், 'ஸ்டன்ட் மாஸ்டர்' ஆக இருக்கிறார், காளி என்ற பெண். 'ஸ்டன்ட் மாஸ்டர்' மாபியா சசியின் சிஷ்யையான இவர், கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது.
கேரள மாநிலம், கொச்சி வைபின்கர பாண்டி காலனியில் பிறந்தார். மூன்று மாத குழந்தையாக இருந்த போது பெற்றோரால் கைவிடப்பட்டு, வேறு ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்டார். படிக்கும்போதே பல வேலைகள் கற்று, செய்து வந்துள்ளார். எங்கும் அவமானம், சென்ற இடமெல்லாம் கிண்டல். அனைத்தையும் சகித்து, ஆண்களுக்கு நிகராக உருவானார்.
ஆண்களை போல மோட்டார் பைக்கில் சுற்றி வந்தவரை கண்ட, மாபியா சசி, தன் சீடராக ஏற்றுக் கொண்டார். 27வது வயதில் வளமையாக வாழ துவங்கியபோது, இவரை தேடி வந்துள்ளார், தந்தை.
'காளி என்ற உன் பெயர் நன்றாக இல்லை. அதற்கு பதிலாக பத்ர மேனன் என வைத்துக் கொள்...' என்று சொல்லியுள்ளார். ஆனால், 'எனக்கு, ஜாதி அடையாளம் எதுவும் தேவையில்லை; நான் காளியாகவே இருக்கிறேன்...' என்று கூறியுள்ளார்.
இன்று, மலையாள சினிமா உலகில், குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு, 'ஸ்டன்ட் மாஸ்டர்' ஆக திகழ்கிறார்.
— ஜோல்னாபையன்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!