நாட்டின் எந்த மாநில சட்டசபையிலாவது, 'மிமிக்ரி' நிகழ்ச்சி செய்ய முடியுமா? முடியும்.
கேரளாவில், 2003ல், பிரபல மிமிக்ரி கலைஞர் ஜெயராஜ் வாரியர், கேரள சட்டசபைக்குள், 'மிமிக்ரி' நிகழ்ச்சி நடத்தியபோது, அன்றைய முதல்வர் எ.கே.ஆன்டனி, எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தனும், அமைச்சர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் ரசித்தனர்.
'இப்படி ஒரு நிகழ்ச்சியை சபைக்குள் நடத்த அனுமதி வழங்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் பாராட்ட வேண்டும்...' என்று கூறினார், 'மிமிக்ரி' கலைஞர்.
நிகழ்ச்சி முடித்து புறப்பட தயாரான கலைஞரை அணுகிய ஈ.கே.நாயனார், 'ஏம்பா, ஆன்டனியை மட்டும், 'மிமிக்ரி' செஞ்சா போதுமா... என்னை மாதிரியும், 'மிமிக்ரி' செய்து, கொஞ்சம், 'பேமஸ்' ஆக்கக் கூடாதா...' எனக் கேட்டார்.
— ஜோல்னாபையன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!