தென் கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின் பாங்காக் நகரில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மாலில், கடந்த, 30 ஆண்டுகளாக ஒரு கொரில்லா, தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.
'புயா நோய்' என, பெயரிடப்பட்டுள்ள இந்த கொரில்லாவுக்கு, 33 வயதாகிறது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பொழுது போக்கிற்காக, இந்த கொரில்லா, இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொரில்லாவை பார்ப்பதற்காகவே, ஷாப்பிங் மாலிற்கு அதிக கூட்டம் வருகிறது.
'கொரில்லாவை, இத்தனை ஆண்டுகளாக தனிமைப்படுத்தி வைத்திருப்பது சரியல்ல; அதை உடனடியாக காட்டில் விட வேண்டும்...' என, விலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தினாலும், ஷாப்பிங் மால் உரிமையாளர்கள், அதை ஏற்க மறுக்கின்றனர்.
'எங்கள் வீட்டில் உள்ள ஒருவரைப் போல், அந்த கொரில்லாவை பராமரிக்கிறோம்; அதற்கு எந்த குறையும் வைக்கவில்லை...' என்கின்றனர்.
— ஜோல்னாபையன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!