மலேஷியாவுக்கும், சீனாவுக்கும் மத்தியில் உள்ள சிறிய நாடு தான், ப்ரூணை. இந்த நாட்டு சுல்தான், உலகின் மிகப்பெரிய செல்வந்தராக இருக்கிறார். பெட்ரோல் விற்பனை மூலம் இவருடைய ஒருநாள் வருவாய், 66 கோடி ரூபாய்.
இவரது அரண்மனை, 21 லட்சம் சதுர அடியில் அமைந்து உள்ளது. 1,788 சொகுசு அறைகள் கொண்டது. உலகில் உள்ள அனைத்து விலை உயர்ந்த கார்களும் இவரிடம் இருக்கின்றன. 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 7,000 கார்கள் இவரிடம் உண்டு.
இவருக்கு, சிகை அலங்காரம் செய்ய, இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப் படுபவர்களுக்கு மட்டும், 18 லட்ச ரூபாய் செலவு செய்கிறார்.
நான்கரை கோடி மக்கள் வாழும் இந்நாட்டில், மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சனை முன்பு ஒருமுறை வரவழைக்க, 125 கோடி செலவு செய்தார். கால்பந்து ரசிகரான இவர், உலகில் உள்ள எல்லா கால்பந்து குழுக்களையும் தன் நாட்டுக்கு அழைத்து, ஏராளமான கோடிகளை செலவழிக்கிறார்.
— ஜோல்னாபையன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!